மேலும் செய்திகள்
குட்கா கடத்தியவர் கைது
22-Sep-2025
கும்மிடிப்பூண்டி: ஆந்திராவில் இருந்து பைக்கில், 30 கிலோ குட்கா கடத்தி வந்த கோலமாவு வியாபாரியை, போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திரா - சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்த 'டி.வி.எஸ்., ஜூபிட்டர்' பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். பைக்கில் 30 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. பைக்குடன் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், செங்குன்றத்தைச் சேர்ந்த கோலமாவு வியாபாரியான மைக்கேல் பவுன்ராஜ், 47, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
22-Sep-2025