மேலும் செய்திகள்
வினாடிக்கு 130 கன அடி கிருஷ்ணா நீர் வருகிறது
11-May-2025
ஊத்துக்கோட்டை:சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தபடி, கண்டலேறு அணையிலிருந்து கடந்த மார்ச் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின், காளஹஸ்தி அருகே 81வது கி.மீ., மற்றும் 115வது கி.மீ.,யில் உள்ள உப்பளமடுகு ஆகிய இடங்களில் கால்வாய் சேதமடைந்தது.இதையடுத்து, தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் நிறத்தப்பட்டது. கடந்த 17ம் தேதி கால்வாய் சீரமைக்கப்பட்டதால், வினாடிக்கு 2,500 கன அடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.இந்த தண்ணீர், 157 கி.மீ., துாரம் சாய் கங்கை கால்வாய் வழியாக பயணித்து, நேற்று காலை 7:00 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்டை அடைந்தது. துவக்கத்தில் 50 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது படிப்படியாக உயரும் என, நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்.
11-May-2025