மேலும் செய்திகள்
விபூதீஸ்வரர் கோவிலில் மே 4ல் கும்பாபிேஷகம்
28-Apr-2025
மணவாளநகர்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி, மணவாளநகரில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோவிலில், நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் கோ பூஜையும், தொடர்ந்து கணபதி, லட்சுமி, நவக்கிர ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், பூர்ணாஹூதியும், கடம் புறப்பாடும் நடந்தது. காலை 10:15 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.அதேபோல், தண்டலம் ஊராட்சிக்குட்பட்ட சிவதண்டலம் பகுதியில் உள்ள கூலியம்மன் கோவிலிலும் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கடம்பத்துார்
கடம்பத்துார் ஊராட்சி வெண்மனம்புதுாரில், சுகந்த குந்தலாம்பாள் சமேத விபூதீஸ்வரர் கோவிலில், நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது.முன்னதாக, கடந்த 2ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி பூஜையும், தொடர்ந்து கணபதி, லட்சுமி, நவக்கிரஹ ஹோமங்கள் நடந்தது.நேற்று காலை 8:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் விநாயகர், சுகந்த குந்தாலம்பாள் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், கடம்பத்துார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
28-Apr-2025