உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லட்சுமி நரசிம்மர் அவதாரோத்ஸவம் பெருமாள் கோவிலில் நாளை துவக்கம்

லட்சுமி நரசிம்மர் அவதாரோத்ஸவம் பெருமாள் கோவிலில் நாளை துவக்கம்

திருமழிசை:திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில் லட்சுமி நரசிம்மர் அவதாரோத்ஸவம், நாளை துவங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. திருமழிசையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஜெகந்நாத பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் அவதாரோத்ஸவம் நடந்து வருகிறது.இந்த ஆண்டுக்கான லட்சுமி நரசிம்ம சுவாமி அவதாரோத்ஸ்வம், நாளை காலை 9:30 மணிக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. மாலை 7:00 மணிக்கு தங்க கேடயத்தில் லட்சுமி நரசிம்மர் திருவீதியுலா நடைபெறும்.தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் லட்சுமி நரசிம்ம சுவாமி அவதாரோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, தினமும் காலை 9:30 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் லட்சுமி நரசிம்மர் வீதியுலாவும் நடைபெறும் என, ஹிந்து அறநிலையத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாள் நிகழ்ச்சி

ஜூன்., 1 தங்க கேடயம்2 மாலை - யாளி வாகனம்3 மாலை - கருட வாகனம்4 மாலை - சேஷ வாகனம்5 மாலை - அனுமந்த வாகனம்6 மாலை - யானை வாகனம்7 மாலை - தேர் திருவிழா8 மாலை - குதிரை வாகனம்9 மாலை - பவழகால் வாகனம்10 மாலை - நரசிம்ம ஜெயந்தி சாத்துமுறை மங்களகிரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை