உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  இணைப்பு சாலை பணி தீவிரம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

 இணைப்பு சாலை பணி தீவிரம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

பள்ளிப்பட்டு: தச்சூர் - சித்துார் வரையிலான ஆறுவழி சாலையில், பள்ளிப்பட்டு அருகே இணைப்பு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் - ஆந்திர மாநிலம் சித்துார் வரை ஆறு வழிச்சாலை அமைக்கும் பணி, இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இச்சாலை வழியாக எண்ணுார் துறைமுகம் முதல் கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை விரைவு சாலை வசதி கிடைக்கும். துறைமுகத்திற்கு சரக்கு போக்குவரத்து விரைவாக கையாளப்படும். ஆறு வழிச்சாலை பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பள்ளிப்பட்டு அருகே குமாரராஜபேட்டையில் இணைப்பு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த இணைப்பு சாலை வாயிலாக பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களை சேர்ந்தவர்கள், ஆறுவழி சாலையை பயன்படுத்தி கொள்ள முடியும். பள்ளிப்பட்டுக்கு அடுத்தபடியாக, திருத்தணி - திருப்பதி நெடுஞ்சாலையில், நகரி அருகே குறுக்கிடும் இந்த ஆறுவழி சாலையில், இணைப்பு சாலை வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை