உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாராயம் கடத்தியவர் கைது

சாராயம் கடத்தியவர் கைது

திருத்தணி:ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சாராயம் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார், திருத்தணி பைபாஸ் சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக பதிவெண் இல்லாத, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்ததில், 2 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. பின், சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெமிலியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், 24, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை