உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி நகரில் ஷேர் ஆட்டோக்கள் இயக்க பகுதி மக்கள் வேண்டுகோள்

திருத்தணி நகரில் ஷேர் ஆட்டோக்கள் இயக்க பகுதி மக்கள் வேண்டுகோள்

திருத்தணி: திருத்தணியில், அரசு அலுவலகங்கள் நகருக்கு வெளியே உள்ளதால், பயனாளிகள் சென்று வருவதற்கு வசதியாக ஷேர் ஆட்டோக்கள் இயக்க வேண்டும் என மக்கள் வேண் டுகோள் விடுத்துள்ளனர். திருத்தணியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், சட்டம் - ஒழுங்கு போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், கருவூலகம் உட்பட பல முக்கிய அரசு அலுவலகங்கள் திருத்தணி நகருக்கு வெளியே இயங்கி வருகிறது. ஒவ்வொரு அலுவலகமும், குறைந்த பட்சம் ஒரு கி.மீ., முதல் மூன்றரை கிலோ மீட்டர் துாரம் வரை உள்ளதால், மக்கள் நடந்தே செல்ல வேண்டும். இந்த அலுவலகங்களுக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லை. இதனால் பயனாளிகள் நடந்தோ அல்லது ஆட்டோவில் செல்ல வேண்டும். ஷேர் ஆட்டோக்கள் இயக்காததால், சாதாரண ஆட்டோவில் செல்வதால், குறைந்த பட்சம், 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அரசு அலுவலகங்களுக்கு ஆட்டோவில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ஷேர் ஆட்டோக்கள் இயக்கினால், 10- 20 ரூபாயில் மேற்கண்ட அலுவலகங்களுக்கு சென்று வரலாம். எனவே மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து, திருத்தணி நகரில் ஷேர் ஆட்டோ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி