மேலும் செய்திகள்
கார் மோதிய விபத்து வி.ஏ.ஓ., படுகாயம்
13-Oct-2024
திருத்தணி:ஆந்திர மாநிலம், நகரி ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் நாகூர்மீரான், 67. ஓய்வு பெற்ற எஸ்.ஐ., இவர், நேற்று காலை 'ஜூப்பிட்டர்' இருசக்கர வாகனத்தில், நகரியில் இருந்து திருத்தணி வழியாக அரக்கோணத்திற்கு சென்று கொண்டிருந்தார்.சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடி அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், நாகூர்மீரான் பலத்த காயம் அடைந்தார்.அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர் பரிசோதனையில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
13-Oct-2024