சாலை விபத்தில் லாரி டிரைவர் பலி
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பாஞ்சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் புவனேஷ், 24; லாரி ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.