உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எம்.சாண்ட் மூட்டைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

எம்.சாண்ட் மூட்டைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

திருவாலங்காடு: திருவாலங்காடு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் பருவ மழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமப் பகுதிகளில் ஏரி, குளம் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுவதை தடுக்கும் வகையில் ஊராட்சி செயலர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தால் அணை போட்டு தடுக்கும் வகையில் திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகத்தில் 300 எம்.சாண்ட் மூட்டைகள் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.சாண்ட் மூட்டைகளை எடுத்து சென்று, பணிகளை மேற்கொள்ள வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன. ஏரி, குளம் உடையும் நிலை இருந்தால் மக்கள் பி.டி.ஓ., அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை