மாயமான 8 வயது சிறுவன் உறவினர்கள் சாலை மறியல்
செங்குன்றம்:சோழவரம் அடுத்த நல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட சிவந்தி ஆதித்தன் நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன், 37, கவிதா, 29. தம்பதியின் மகன் லுக்கேஷ், 8. பம்மதுகுளம் அரசு பள்ளியில் முன்றாம் வகுப்பு படிக்கிறார்.இவர், நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், பதறிப்போன பெற்றோர், சோழவரம் போலீசில் புகார் அளித்தனர்.மேலும், சிறுவனை கண்டுபிடித்து தர வலியுறுத்தி, சிறுவனின் உறவினர்கள், பொத்துார் சந்திப்பு, போலீஸ் பூத் அருகே, நேற்று முற்பகல் 11:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் பேசியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.