உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெருமாள்பட்டு கோவிலில் வரும் 26ல் மஹா சிவராத்திரி

பெருமாள்பட்டு கோவிலில் வரும் 26ல் மஹா சிவராத்திரி

பெருமாள்பட்டு:திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு, மங்களாம்பிகை உடனுறை திருக்கண்டீஸ்வரர் கோவிலில், வரும் 26ம் தேதி, மஹா சிவராத்திரி வைபவம் கோலாகலமாக நடைபெற உள்ளது.அன்று, காலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 5:30 மணிக்கு மங்கள இசையும், காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும்.பின், மாலை 6:00 மணிக்கு, முதல் கால பூஜையுடன், மஹா சிவராத்திரி வைபவம் துவங்கும். இரவு 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், இரவு 12:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், மறுநாள் 27ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ