உள்ளூர் செய்திகள்

ஆண் உடல் மீட்பு

ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் அருகே ஆண் சடலம் மீட்கப்பட்டது. வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, தாமரைப்பாக்கம் பூசாலிமேடு கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு எதிரில் உள்ள பள்ளத்தில் தேங்கியுள்ள நீரில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. வெங்கல் போலீசார் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ