உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மதுபாட்டிலால் தாக்கியவருக்கு வலை

மதுபாட்டிலால் தாக்கியவருக்கு வலை

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தைச் சேர்ந்தவர் அஜித், 28. இவர், நேற்று முன்தினம் இரவு திரவுபதியம்மன் கோவில் அருகே, அவரது அண்ணன் தாமோதரனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அம்மையார்குப்பம் சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த தியாகு, 27, என்பவர், அஜித் மற்றும் தாமோதரனுடன் வாக்குவாதம் செய்தார். பின் தியாகு, அவரது கையில் வைத்திருந்த மதுபாட்டிலால் அஜித்தின் முகத்தில் குத்தினார்.இதில் படுகாயமடைந்த அஜித், சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ