உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயிலில் போதை மாத்திரை கடத்தியவர் கைது

ரயிலில் போதை மாத்திரை கடத்தியவர் கைது

திருத்தணி:மும்பையில் இருந்து ரயிலில் போதை மாத்திரை கடத்தப்பட்டு வருவதாக, திருத்தணி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையிலான சிறப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். மதியம், 2:30 மணியளவில் மும்பையில் இருந்து, திருத்தணி வந்து சேர்ந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பயணியர் இறங்கி வெளியேறினர்.அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தவரை, போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் மேற்கொண்ட சோதனையில், அவரிடம் இருந்து, 400 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. கடத்தலில் ஈடுபட்டவர், திருவள்ளூரைச் சேர்ந்த மஜீத், 31, என, தெரியவந்தது. போலீசார், மஜீத்திடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ