பஸ்சில் கஞ்சா கடத்தியவர் கைது
கும்மிடிப்பூண்டி: ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு, பேருந்தில் கஞ்சா கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் நெல்லுாரில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்தை நிறுத்தி, பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர். அதில் பயணித்த, திருநெல்வேலி மாவட்டம், மானுார் அடுத்த தெற்குப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஈசாக்ராஜ், 19, என்பவரிடம், ஆறு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆரம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.