உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மரக்கன்றுகளின் பாதுகாப்பு கூண்டுகள் திருடியவர் கைது

 மரக்கன்றுகளின் பாதுகாப்பு கூண்டுகள் திருடியவர் கைது

திருத்தணி: சாலையோரம் மரக்கன்றுகளின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கூண்டுகளை திருடியவரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருத்தணி தாலுகாவில் உள்ள வேலஞ்சேரி - நெமிலி நெடுஞ்சாலையோரம், திருத்தணி வனத்துறையினர் சார்பில், 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும், மரக்கன்றுகளின் பாதுகாப்பிற்காக மரக்கன்றை சுற்றிலும் இரும்பு வலை எனப்படும் கூண்டுகள் வைக்கப்பட்டன. நேற்று திருத்தணி வனச்சரகர் ராமச்சந்திரன் மேற்கண்ட சாலையோரம் ஆய்வு செய்தார். அப்போது, 70 மரக்கன்றுகளின் இரும்பு கூண்டுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, அருங்குளம் கே.ஏ.கண்டிகையைச் சேர்ந்த பெருமாள், 35, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ