உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

திருத்தணி,திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர், 28. இவர், கடந்தாண்டு மார்ச் மாதம், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள ஒரு கிராமத்தில், பெயின்ட் வேலைக்கு சென்றபோது, அங்கு, 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறினார்.பின், ஏப்ரல் மாதம், அந்த சிறுமியை, தனசேகர் அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொண்டு, கன்னிகாபுரம் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.இந்நிலையில், சிறுமியை பிரசவத்திற்காக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் சேர்த்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து, டாக்டர்கள் அளித்த புகாரின்படி, திருத்தணி அனைத்து மகளிர் போலீசார் தனசேகர் மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !