உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையை கடக்க முயன்றவர் பேருந்து மோதி உயிரிழப்பு

சாலையை கடக்க முயன்றவர் பேருந்து மோதி உயிரிழப்பு

ஆர்.கே.பேட்டை,:பள்ளிப்பட்டில் இருந்து ஆர்.கே.பேட்டை வழியாக, திருவள்ளூருக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.பள்ளிப்பட்டில் இருந்து ஆர்.கே.பேட்டை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது.நரசிம்மபேட்டை கூட்டு சாலை அருகே வந்த போது, கோசராபள்ளி காலனியைச் சேர்ந்த விஜயன், 50, என்பவர், சாலையை கடக்க முயன்றார். வேகமாக வந்த பேருந்து, விஜயன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், சடலத்தை கைப்பற்றி சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்தை கைப்பற்றி, பேருந்து ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை