பைக்கில் இருந்து விழுந்தவர் பலி
மப்பேடு, ஆந்திர மாநிலம் சித்துார் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 40. இவர், குடுத்தினருடன் பேரம்பாக்கம் ஐய்யன்குளம் பகுதியில் தங்கி, மண்ணுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 22ம் தேதி பணிக்கு சென்று விட்டு, மாலை தன்னுடன் பணிபுரியும் ராஜதுரை, 28, என்பவருடன் 'பல்சர்' பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் வந்தபோது, மாடு குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ரவிச்சந்திரன், செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். ராஜதுரை சிறு காயமடைந்தார்.நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் உயிரிழந்தார். மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.