உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக்கில் இருந்து விழுந்தவர் லாரி ஏறி பலி

பைக்கில் இருந்து விழுந்தவர் லாரி ஏறி பலி

திருவள்ளூர்:பைக்குகள் மோதிய விபத்தில் கீழே விழுந்தவர் மீது லாரி ஏறியதில் உயிரிழந்தார்.திருவள்ளூர் அடுத்த மோவூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி, 40. இவர் நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் திருவள்ளூரில் இருந்து ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் வீட்டிற்கு சென்றார். வேடங்கிநல்லுார் புதிய பேருந்து நிலையம் அருகே முன்னால் சென்ற டி.வி.எஸ்.எக்ஸ்.எல்., ஸ்கூட்டரில் மோதி கீழே விழுந்தார்.எதிரே, திருவள்ளூர் நோக்கி காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த ஐச்சர் லாரி சாலையில் விழுந்த பழனி மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே பழனி உயிரிழந்தார்.தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை