உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடியில், 12ம் தேதி போலீசார் நடத்திய வாகன சோதயைில், ‛டாடா நானோ' காரில் கடத்தப்பட்ட, 40 கிலோ கஞ்சா சிக்கியது. கடத்திய பெண் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் வழக்கு பதிந்து மூவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கஞ்சா வாங்கி வருவதற்காக பணம் கொடுத்தவர், கேரள மாநிலம், மலப்புரம் அருகே திருரங்காடி பகுதியை சேர்ந்த சலீம், 52, என்பது தெரியவந்தது. அவரது மொபைல்போன் எண்ணை ‛டிராக்' செய்த போலீசார், அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்து நேற்று கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ