உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூண்டி நீர்த்தேக்கத்தில் மூழ்கியவர் மாயம்

பூண்டி நீர்த்தேக்கத்தில் மூழ்கியவர் மாயம்

ஊத்துக்கோட்டை: பூண்டி நீர்த்தேக்கத்தில் மீன் பிடிக்கும் போது படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கியவரை தேடும் பணி நடக்கிறது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் யாசின், 22, சுபான், 23, சமீர் அகமது, 19, மோவூர் கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ், 22. நேற்று மாலை யாசின், ராகேஷ் ஒரு படகிலும், சுபான், சமீர்அகமது ஒரு படகிலும் பூண்டி நீர்த்தேக்கத்தில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். யாசின் சென்ற படகு கவிழ்ந்ததில் யாசின் நீரில் மூழ்கினார். ராகேஷ் நீச்சல் அடித்து கரை சேர்ந்தார். இதுகுறித்து திருவள்ளூர் தீயணைப்புத் துறையினருக்கு தவகல் அளிக்கப்பட்டது. அவர்கள் யாசினை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை