உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உறவினருடன் தகராறு செய்தவர் பைக்கை எரித்து போலீசில் சரண்

உறவினருடன் தகராறு செய்தவர் பைக்கை எரித்து போலீசில் சரண்

திருவாலங்காடு:திருவாலங்காடு அருகே உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டவர், பைக்கை தீயிட்டு எரித்து, போலீசில் சரணடைந்தார். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் நார்த்தவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன், 22. இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இவர், நேற்று நார்த்தவாடா கிராமத்தில் அவருடைய பெரியப்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, உருட்டு கட்டையால் தாக்கினார். இதை கண்ட ஜெகனின் மாமாவான, பழையனுாரைச் சேர்ந்த சுதாகர், 42, தடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஜெகன், சுதாகரை உருட்டு கட்டையால் தாக்கியதுடன், அவருடைய 'ஹூரோ ஹோண்டா ஸ்பிளண்டர் ப்ரோ' பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்தார். பின் ஜெகன், திருவாலங்காடு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து சுதாகர் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ