மேலும் செய்திகள்
பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
10-Dec-2024
வெங்கத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது மணவாள நகர். இப்பகுதிவாசிகள் குடிநீர் வசதிக்காக வெங்கத்துார் ஏரியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த 10 நாட்களுக்கு முன் ஆழ்துளை கிணறு மின்மோட்டார் பழுது ஏற்பட்டது. அதை சீரமைக்க எவ்வித நடவடிக்கை இன்று வரை ஊராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை.இதனால் கபிலர் நகர் உட்பட சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் இல்லாமல், 10 நாட்களாக பகுதிவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரி வெங்கத்துார் ஊராட்சியில் ஆய்வு செய்து, புதிய மின்மோட்டார் அமைத்து, குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என, மணவாள நகர் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10-Dec-2024