உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வடாரண்யேஸ்வரர் கோவிலில் மாந்தீஸ்வரர் பூஜை நாளை கட்

வடாரண்யேஸ்வரர் கோவிலில் மாந்தீஸ்வரர் பூஜை நாளை கட்

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடப்பது வழக்கம்.இப்பூஜையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர, கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று செல்கின்றனர்.கடந்த 1ம் தேதி முதல் வரும் 10ம் தேதி வரை பங்குனி உத்திர விழாவை ஒட்டி கோவிலில் விழா நடந்து வருகிறது. இதன் காரணமாக நாளை மாந்தீஸ்வரர் பூஜை நிறுத்தப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் சனிக்கிழமை மாந்தீஸ்வரர் பரிகார பூஜை வழக்கம் போல நடக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !