முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டி மாதர்பாக்கம் அரசு பள்ளி சாம்பியன்
கும்மிடிப்பூண்டி:முதல்வர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் திருவள்ளூர் மாவட்ட அளவிலான சாம்பியன் பட்டத்தை, மாதர்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி கிரிக்கெட் அணி வென்றது. திருவள்ளூரில், முதல்வர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி, கடந்த 27ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் வரை நடந்தது. மாவட்ட அளவில் நடந்த போட்டியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 143 அணியினர் பங்கேற்றனர். அந்த போட்டியில், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பாதிரிவேடு -மாதர்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி கிரிக்கெட் அணியினர் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்றனர். இதன் வாயிலாக, மாநில அளவில் நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்க இருக்கும் திருவள்ளூர் மாவட்ட அணியில் ஆறு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். வெற்றி பெற்ற அணியினருக்கு, பள்ளி சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கவிதா, உடற்கல்வி ஆசிரியர் கருணா ஆகியோர் பாராட்டினர்.