உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அம்மையார்குப்பம் பஜார் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்கு அளவீடு

அம்மையார்குப்பம் பஜார் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்கு அளவீடு

ஆர்.கே.பேட்டை:அம்மையார்குப்பம் பஜார் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற பகுதிவாசிகளின் கோரிக்கைப்படி, நேற்று வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அளவீடு பணியில் ஈடுபட்டனர். ஆர்.கே.பேட்டையில் இருந்து அம்மையார்குப்பம் வழியாக ஆவலகுண்டா வரை செல்லும் சாலையில், அம்மையார்குப்பம் பஜார் பகுதி, ஆக்கிரமிப்பில் சிக்கி குறுகியுள்ளதாக பகுதிவாசிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால், ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் நிலவுகிறது. ஓராண்டுக்கு முன் இந்த பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனாலும், முழுமையாக அகற்றப்படவில்லை என பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நேற்று காலை மீண்டும் இந்த பகுதியில், சாலை விரிவாக்கத்திற்கான அளவீட்டு பணிகளை வருவாய் துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் இணைந்து மேற்கொண்டனர். பாதுகாப்பு பணியில் ஆர்.கே.பேட்டை போலீசார் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை