உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துப்புரவு ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்

துப்புரவு ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், தனியார் துாய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் என மொத்தம், 240 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, நேற்று, சிறப்பு மருத்துவ முகாம் தனியார் மண்டபத்தில் நடந்தது.முகாமை திருவள்ளூர் நகராட்சி தலைவர் உதயமலர், ஆணையர் திருநாவுக்கரசு ஆகியோர் துவக்கி வைத்தனர்.இதில், திருவள்ளூர் வட்டார மருத்துவர் சுபாஸ்சந்திரபோஸ் தலைமையில் மருத்துவ குழுவினர் பங்கேற்று, பொது மருத்துவம், பல், கண், ரத்தப் பரிசோதனை, சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.மேலும், மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், சுகாதார அலுவலர் மோகன், நகராட்சி ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !