உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் மருத்துவ முகாம்

திருத்தணியில் மருத்துவ முகாம்

திருத்தணி:நகராட்சியில் நடந்த துாய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமில், 170 பேருக்கு சிகிச்சை, மருந்துகள் வழங்கப்பட்டன. திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், பீகாக் மருத்துவமனை சார்பில் துாய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி, ஆணையர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் பங்கேற்று, துாய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பரிசோதனைகள் மற்றும் மருத்துவர் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், நோய் சம்மந்தமான அறிகுறிகள் மற்றும் அதற்கு தேவையான மருந்து, மாத்திரைகளும் முகாமில் இலவசமாக வழங்கப்பட்டன. துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை