உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

 நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

திருவள்ளூர்: வருவாய் கோட்ட அலுவலகங்களில் நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளுர் மாவட்டத்தில், பொன்னேரி, திருவள்ளுர் மற்றும் திருத்தணி வருவாய் கோட்ட அலுவலகங்களில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், நாளை காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. கோட்ட அளவில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்பாக தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட, வேளாண் சார்ந்த அனைத்து துறை அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை