மேலும் செய்திகள்
கார் கண்ணாடியை உடைத்த மனநலம் பாதித்த பீஹார் நபர்
13-Aug-2025
ஆர்.கே.பேட்டை:மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையில் சுற்றி திரிந்தவர் சடலமாக மீட்கப்பட்டார். சென்னை, வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார், 43. இவர் மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையில் சுற்றி திரிந்து வந்தார். சில நாட்களாக ஆர்.கே.பேட்டை மற்றும் சோளிங்கர் பகுதியில் சுற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை பத்மா புரம் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக, ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சாலையோரத்தில் சடலமாக கிடந்தவரை மீட்டனர். விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்து வந்த சரவணகுமார் என, தெரியவந்தது.
13-Aug-2025