உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் முதல்வர் கள ஆய்வு அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

திருவள்ளூரில் முதல்வர் கள ஆய்வு அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் கள ஆய்வு செய்ய உள்ள நிலையில், முன்னேற்பாடு குறித்து அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு நடத்தி வருகிறார். அப்போது, அந்தந்த மாவட்டத்தில் நடைபெற்று வரும் நலத்திட்ட பணிகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கி வருகிறார்.அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்விற்காக வரவுள்ளார். இதையடுத்து, சிறுபான்மையினர் நல துறை அமைச்சர் நாசர் தலைமையில். அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் பிரதாப், ஆவடி மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், அடிக்கல் நாட்டி வைக்கப்படும் திட்டப்பணி, முடிவுற்ற பணிகள், பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவி வழங்குதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடந்தது.நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் டி.ஜே.கோவிந்தராஜன் - கும்மிடிப்பூண்டி, துரை சந்திரசேகர் - பொன்னேரி, ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ