கடையின் பூட்டை உடைத்து மொபைல்போன்கள் திருட்டு
திருவள்ளூர், மொபைல்போன் கடையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல்போன்கள் திருடப்பட்டது. திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்கி, 35. இவர், காக்களூர் பேருந்து நிலையம் அருகே, 'கணபதி மொபைல்ஸ்' என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றார். பின், நேற்று காலை கடையை திறந்த போது, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல்போன்கள் மற்றும் 50,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. மர்மநபர்கள் மேல்தளத்தில் இருந்த ஓட்டினை உடைத்து உள்ளே புகுந்தது தெரியவந்தது. திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.