உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உண்டியல் திருடியவர் கைது

உண்டியல் திருடியவர் கைது

வேப்பம்பட்டு:வேப்பம்பட்டு பகுதியில் விநாயகர் கோவில் உண்டியல் உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் வேப்பம்பட்டு செஞ்சூரியன் நகர் பகுதியில் அமைந்துள்ளது செல்வ விநாயர் கோவில். நேற்று முன்தினம் காலை கோவில் உண்டியல் உடைந்து கிடப்பதாக செவ்வாப்பேட்டை போலீசாருக்கு பகுதி மக்கள் தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உண்டியல் உடைத்து, அதில் இருந்த 1,500 ரூபாயை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், 32 திருடியது தெரிந்தது. ஜெயக்குமாரை நேற்று கைது செய்து போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி