மேலும் செய்திகள்
கோவிலில் திருட்டு; போலீசார் விசாரணை
12-Dec-2024
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, நெய்தவாயல் கிராமத்தில், பிடாரி கவுசியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் பூஜைகள் முடிந்து கோவில் பூட்டப்பட்டது. நேற்று காலை வழக்கம்போல கோவிலை திறந்து பூஜைகள் செய்ய வந்த கிராமவாசிகள், அங்குள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டனர்.நள்ளிரவு மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடி சென்றது தெரிந்தது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
12-Dec-2024