உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதிகள் கண்காணிப்பு

ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதிகள் கண்காணிப்பு

கும்மிடிப்பூண்டி: ஆரணி ஆற்றில் விநாடிக்கு, 3,000 கன அடி மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர பகுதிகளை நீர்வளத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். கவரைப்பேட்டை அடுத்த ஏ.என்.குப்பம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. சில நாட்களாக பெய்து வரும் மழையால், ஆரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. அணைக்கட்டில் இருந்து விநாடிக்கு, 3,000 கன அடி தண்ணீர் வழிந்து ஓடுவதால், ஆரணி ஆற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கரையோர பகுதிகளை நீர்வளத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முக்கியமான இடங்களில், மணல் மூட்டைகள் தயாராக வைத்துள்ளனர். அணைக்கட்டு பகுதியில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டதால், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ