உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏ மண்டல பூப்பந்தாட்டம் எம்.ஓ.பி., அணி முதலிடம்

ஏ மண்டல பூப்பந்தாட்டம் எம்.ஓ.பி., அணி முதலிடம்

சென்னை :சென்னை பல்கலையின், 'ஏ' மண்டல பூப்பந்தாட்ட போட்டியில், எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லுாரி அணி முதலிடத்தை தட்டிச் சென்றது. சென்னை பல்கலையின், 'ஏ' மண்டல பால்பேட்மின்டன் எனும் பூப்பந்தாட்ட போட்டி, தேனாம்பேட்டையில் உள்ள ஜெபாஸ் கல்லுாரி வளாகத்தில், கடந்த 30ம் தேதி துவங்கியது. இதில், ராணிமேரி, எஸ்.ஆர்.எம்., - ஜேப்பியார், பச்சையப்பா உள்ளிட்ட, 14 மகளிர் கல்லுாரி அணியினர் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில், எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லுாரி, 33 - 35, 35 - 23, 35 - 28 என்ற செட் கணக்கில் ஜெபாஸ் கல்லுாரியை தோற்கடித்து, முதலிடம் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை