உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூட்டிய வீட்டில் துர்நாற்றம் தாய், மகன் சடலம் மீட்பு

பூட்டிய வீட்டில் துர்நாற்றம் தாய், மகன் சடலம் மீட்பு

ஆவடி:ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், தென்றல் நகரைச் சேர்ந்தவர் வசந்தா, 60. அவரது மகன் சங்கர், 35; தனியார் நிறுவன ஊழியர்.நேற்று முன்தினம் இரவு, இவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.திருமுல்லைவாயில் போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது, வசந்தா, கட்டலில் இறந்து கிடந்தார். சங்கர், துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.இருவரது சடலங்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.முதற்கட்ட விசாரணையில், வசந்தாவுக்கு நீண்ட காலமாக ஆஸ்துமா இருந்துள்ளதும், முறையான சிகிச்சை இல்லாததால் இறந்ததும் தெரியவந்தது.தாய் இறந்த மன உளைச்சலில் இருந்த சங்கர், வீட்டில் துாக்கிட்டுள்ளார். இருவரும் இரு நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை