மேலும் செய்திகள்
வீடு புகுந்து பெண் கொலை தங்க நகைகள் கொள்ளை
23-Apr-2025
ஆவடி:ஆவடி அடுத்து மோரை, திருமலை நகரைச் சேர்ந்தவர் சின்னத்துரை, 26; கார் ஓட்டுநர். இவரது மனைவி சுகுணா, 23. இவர்களுக்கு சந்தோஷ் என்ற 4 வயது மகன் உள்ளான். இவர்களுடன், சுகுணாவின் தங்கையும் நர்சிங் கல்லுாரி மாணவியுமான அஞ்சனா, 17, தங்கி இருந்தார்.சுகுணா, மகன் சந்தோஷ், தங்கை அஞ்சனாவுடன், மோரை, வேல்முருகன் நகரில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் நேற்று காலை துணி துவைக்க சென்றார். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சந்தோஷ், திடீரென தண்ணீரில் விழுந்து மூழ்கினான்.அதே பகுதியைச் சேர்ந்த நிதிஷ் குமார், 19, என்பவர், சிறுவனை பத்திரமாக மீட்டார். அதேநேரம், சிறுவனை காப்பாற்ற கால்வாயில் குதித்த சுகுணா மற்றும் அஞ்சனா, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.அங்கிருந்தவர்கள், தண்ணீரில் குதித்து 150 மீட்டர் துாரத்தில் இருவரையும் மீட்டு, அருகில் உள்ள மோரை ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர்.அங்கு மருத்துவ பரிசோதனையில், வரும் வழியிலேயே இருவரும் இறந்தது தெரிந்தது. தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
23-Apr-2025