உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆற்று பாலத்தில் சிதறி கிடக்கும் மணலால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

ஆற்று பாலத்தில் சிதறி கிடக்கும் மணலால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

ஊத்துக்கோட்டை:ஆரணி ஆற்று பாலத்தில் சிதறிக் கிடக்கும் மணலால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைந்து வருகின்றனர். ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில், 29 கோடி ரூபாய் மதிப்பிட்டில் கட்டப்பட்ட பாலத்தின் வழியாக, தினமும் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்வோர், இந்த பாலத்தின் வழியே தான் செல்ல வேண்டும். அதேபோல், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஆந்திர மாநிலம் சத்தியவேடு, தடா, வரதயபாளையம், சூளூர்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்கள் மேற்கண்ட பாலத்தின் வழியே செல்ல வேண்டும். இந்த பாலத்தின் இருபுறமும் மணல்பரவியுள்ளது. காற்று வீசும் போது இந்த மணல், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கிறது. சமீபகாலமாக மழை பெய்து வருவதால், இந்த மண்ணுடன் மழைநீர் கலந்து சகதியாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாததால், இருசக்கர வாகனங்களில் செல்வோர், சகதியில் சிக்கி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, திருவள்ளூர் நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ