உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தடுப்பின்றி பைவலசா ஏரிக்கரை விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

தடுப்பின்றி பைவலசா ஏரிக்கரை விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பைவலசா கிராமத்தில் இருந்து, கட்டாரிகுப்பம் செல்லும் வழியில், பைவலசா ஏரிக்கரை அமைந்துள்ளது. மலைகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த ஏரி, ஆண்டு முழுதும் தண்ணீரால் நிரம்பியே காணப்படும்.ஏரிக்கரை முழுதும் புங்கன் மரங்களால் நிழல் படர்ந்து ரம்மியமாக காட்சியளவிக்கும். புங்கன் இலை சருகு, விதைகள் ஏரியில் கலப்பதால், ஏரி நீர், விவசாயத்திற்கு இயற்கை உரம் கலந்த கலவையாக பயன் தருகிறது.இந்நிலையில், இந்த ஏரிக்கரையின் தெற்கு பகுதியில், உபரிநீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயை அமைந்துள்ள பகுதி சாலை திருப்பமாக உள்ளதால், இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.இந்த பகுதியில் சாலை தடுப்புகள் அமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ