உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குளத்தின் சுற்றுச்சுவர் சேதம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

குளத்தின் சுற்றுச்சுவர் சேதம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில், ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் முகப்பில் பரந்து விரிந்து காணப்படும் குளத்தின் தெற்கு பகுதி சுற்றுச்சுவர், 2021 டிசம்பர் மாதம் பெய்த கன மழையின் போது இடிந்து விழுந்தது.மீதமுள்ள சுவரும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. பக்தர்கள் குளத்தை பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருப்பதால், பக்தர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. சுவரை ஒட்டிய சிமென்ட் சாலையும் சரிந்ததால், அப்பகுதியை கடக்கும் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.ஹிந்து அறநிலையத் துறையும், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து துரித நடவடிக்கை எடுத்து, புதிய சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.மூன்றரை ஆண்டுகள் கடந்தும் சுற்றுச்சுவர் அமைக்க அரசு முன் வராதது, வேதனை அளிப்பதாக பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர். சில நாட்களுக்கு முன், ஆட்டோ ஒன்று, அந்த குளத்தில் கவிழ்ந்து இருவர் காயமடைந்தனர்.எனவே, உடனடியாக ஞானவேல் முருகன் கோவில் குளத்திற்கு புதிய சுற்றுச்சுவர் அமைத்து, துாய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி