உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் மண் குவியல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சாலையில் மண் குவியல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

திருமழிசை:சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலை மற்றும் இணைப்பு சாலை பகுதியில் உள்ள மீடியன்களில் அதிகளவில் மண் குவிந்து காணப்படுகிறது.மணல் திட்டு போல் காட்சியளிக்கும் இந்த குவியல், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த மண் குவியலில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ