பாப்பரம்பாக்கம் சாலை பஞ்சர் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
போளிவாக்கம்:போளிவாக்கம் பகுதியில் சேதமடைந்த நெடுஞ்சாலையில், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது போளிவாக்கம். இங்கிருந்து பாக்குபேட்டை, வலசைவெட்டிகாடு, இலுப்பூர் வழியாக பாப்பரம்பாக்கம், மண்ணுார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியாக தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலை பல இடங்களில் சேதமடைந்து, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.