உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குளமாக மாறிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

குளமாக மாறிய நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருமழிசை:திருமழிசை பகுதியிலிருந்து காவல்சேரி, கோளப்பன்சேரி, பாரிவாக்கம் வழியாக பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலை குளமாக மாறியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.திருமழிசை பகுதியில் இருந்து காவல்சேரி, கோளப்பன்சேரி, பாரிவாக்கம், பாணவேடுதோட்டம், வயலாநல்லுார் வழியாக பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியே தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் வயலாநல்லுார், கோளப்பன்சேரி, பாரிவாக்கம் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலில்சிக்கி தவிப்பதோடு விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை