உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் மண் படலத்தால் வாகன ஓட்டிகள் அவதி

தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் மண் படலத்தால் வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர்:சென்னை --- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியே தினமும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை, ஆறுவழிச் சாலையாக அமைக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை மதுரவாயல் முதல், வாலாஜா வரையிலான 98 கி.மீ., நீளச் சாலை, 2014-ம் ஆண்டு, விரிவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் விடப்பட்டன. கடந்த 2018-ம் ஆண்டின் இறுதியில் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகின்றன.மாநில நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் முதல், ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 23 கி.மீ., நீள சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்து விட்டது.சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையில் இந்த நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில். வேலப்பன்சாவடி முதல். திருமழிசை வரை உள்ள தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் உள்ள இணைப்பு சாலை பகுதியில் உள்ள மீடியன் பகுதியில் பல இடங்களில் 200 மீட்டர் தொலைவிற்கு வண்டல் மண் படலம் காணப்படுகிறது.மணல் திட்டு போல காட்சியளிக்கும் அந்த படலத்தால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் வண்டல் மண் படலத்தால் விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், துரித நடவடிக்கை எடுத்து, வண்டல் மண் படலத்தை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை