உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வழிகாட்டி பலகை இல்லாமல் வாகன ஓட்டிகள் தவிப்பு

வழிகாட்டி பலகை இல்லாமல் வாகன ஓட்டிகள் தவிப்பு

பொன்னேரி:சென்னை - - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோழவரம் அடுத்த ஜனப்பசத்திரம் கூட்டுச்சாலையில் இருந்து, பெரியபாளையம் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது.சென்னையில் இருந்து பெரியபாளையம், புத்துார், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள், தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து, ஜனப்பசத்திரத்தில் இருந்து இடதுபுறமாக திரும்பி செல்ல வேண்டும்.இதில், காரனோடை மேம்பாலத்தை கடந்த உடன், இதற்கான சாலை பிரிகிறது. இங்கு எந்தவொரு வழிகாட்டியும் பலகையும் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் நேராக பயணித்து சிறிது துாரம் சென்றபின், தவறாக சென்றது தெரிந்து, பின்நோக்கி வருகின்றனர்.பெரியபாளையம், புத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களுக்கும் சிரமங்கள் ஏற்படுகிறது.விபத்துக்கள் நேரிடும் அபாயம் உள்ளதால் காரனோடை பாலத்தின் அருகில் வழிகாட்டி பலகை வைத்து வாகன ஓட்டிகளின் சிரமங்களை தவிர்க்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்