உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரண்டே மாதத்தில் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அதிருப்தி

இரண்டே மாதத்தில் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அதிருப்தி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் இடையே போடப்பட்ட தார்சாலை இரண்டு மாதங்களில் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துஉள்ளனர். சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஜனப்பன்சத்திரம் பகுதியில் இருந்து இடதுபுறம் சாலையில் திருப்பதி செல்லும் சாலை உள்ளது. இதில் ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை வரை, 36 கி.மீ., தமிழக பகுதியில் உள்ளது. தினமும், 20,000த்திற் கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் இச்சாலை, குண்டும், குழியுமாக காணப்பட்டது. தேர்வாய் சிப்காட் தொழிற்சாலை இந்த சாலை மார்க்கத்தில் உள்ளது. மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தியான பொருட்கள் எடுத்து செல்ல தினமும், 400க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இரு மாதத்திற்கு முன் ஜனப்பன்சத்திரம்- ஊத்துக்கோட்டை இடையே, 36 கோடி ரூபாயில் தார்சாலை அமைக்கும் பணி நடந்தது. பணி முடிந்து சமீபத்தில் வெள்ளை வர்ண கோடு அடிக்கப்பட்டது. வடகிழக்குப் பருவமழை மற்றும் ''மோந்தா' புயல் காரணமாக மழை பெய்தது. இந்த மழைக்கு ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், தண்டலம், பெரியபாளையம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் செல்லும் வாகனங்களால் பள்ளங்கள், 'மெகா சைஸ்' பள்ளங்களாக மாறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தரமான பொருட்களால் தார்சாலை அமைக்காததே காரணம் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை