உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முக்கரம்பாக்கம் சாலை மோசம் கிராமவாசிகள் சாலை மறியல்

முக்கரம்பாக்கம் சாலை மோசம் கிராமவாசிகள் சாலை மறியல்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த முக்கரம்பாக்கம் கிராமத்தில், 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி வாசிகளின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலை.சமீபத்தில் பெய்த மழையால், இப்பகுதியில் உள்ள சாலை சேதமடைந்தது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், ஆத்திரமடைந்த கிராமத்தினர், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் தேவராஜ் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில், சேதமடைந்த சாலை நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின்கீழ் வருவதால், அவர்களிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை